நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2023-24 நிதியாண்டில் மத்திய அரசின் ஏப்ரல் மாத கணக்குகளின் மாதாந்திர ஆய்வு

प्रविष्टि तिथि: 31 MAY 2023 4:08PM by PIB Chennai

2023 ஏப்ரல் மாதத்துக்கான  மத்திய அரசின் மாதாந்திர கணக்கு ஒருங்கிணைக்கப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஏப்ரல் 2023ல் ரூ.1,70,501 கோடி வருவாயை அரசு பெற்றுள்ளது. இதில் ரூ.1,58,901 கோடி வரி வருவாய். ரூ.10,958 கோடி வரி அல்லாத வருவாய். கடன் அல்லாத மூலதன வரவு ரூ.642 கோடி. கடன் அல்லாத மூலதன வருவாய் மீட்பு ரூ.592 கோடி. இதர மூலதன வரவு ரூ.9 கோடி. இந்தக் காலக்கட்டத்தில் இந்திய அரசால் வரிப் பகிர்வாக மாநில அரசுகளுக்கு ரூ.59,140 கோடி மாற்றப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ.11,548 கோடி அதிகமாகும்.

மத்திய அரசின் மொத்தச் செலவினம் ரூ.3,04,096 கோடி.இதில் ரூ.2,25,639 கோடி வருவாய்க் கணக்கிலும், ரூ.78,457 கோடி மூலதனக் கணக்கிலும் உள்ளது. மொத்த வருவாய் செலவினங்களில், ரூ.47,929 கோடி வட்டி செலுத்துதலாகவும், ரூ.25,161 கோடி முக்கிய  மானியங்களாகவும் உள்ளது.

 

******

AP/PKV/KRS

(Release ID: 1928626)


(रिलीज़ आईडी: 1928785) आगंतुक पटल : 226
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Bengali , English , Urdu , हिन्दी , Telugu