எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022-23 நிதியாண்டின் 4வது காலாண்டில் மொயில் மூலம் 4.02 லட்சம் டன் மாங்கனீசு தாது உற்பத்தி; கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 7% வளர்ச்சி

प्रविष्टि तिथि: 29 MAY 2023 4:45PM by PIB Chennai

இந்திய மாங்கனீஸ் தாது நிறுவனம் மொயில் -ன் இயக்குநர்கள் குழு, மார்ச் 31, 2023 அன்று முடிவடைந்த நான்காவது காலாண்டு மற்றும் நிதியாண்டுக்கான நிதி முடிவுகளை அங்கீகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டின் நான்காவது காலாண்டில்,  4.02 லட்சம் டன் மாங்கனீஸ் தாதுவை உற்பத்தி செய்து, 7% வளர்ச்சியை நிறுவனம் எட்டியுள்ளது.

நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டாவது மிக உயர்ந்த உற்பத்தியை நிறுவனம் பதிவு செய்தது. இந்த ஆண்டில் மாங்கனீஸ் தாது விற்பனை 11.78 லட்சம் டன்களாக இருந்தது, இது சந்தை நிலவரங்களின் அடிப்படையில் முந்தைய நிதியாண்டைவிட சற்று குறைவாக இருந்தது.

நிறுவனத்தின் மூலதனச் செலவை  ரூ. 245 கோடி ஆகும். இது அந்த ஆண்டின் நிகர லாபத்திற்கு  கிட்டத்தட்ட சமம். 23-ம் நிதியாண்டில், 41,762 மீட்டர் நீளமுள்ள சிறந்த ஆய்வு மைய துளையிடலை மொயில் நிறுவனம் மேற்கொண்டது.  இது கடந்த 5 ஆண்டுகளில் எட்டப்பட்ட சராசரி அளவை விட 2.7 மடங்கு அதிகமாகும். இது தற்போதுள்ள சுரங்கங்களில் இருந்து மேம்பட்ட உற்பத்திக்கு அடிப்படையாக அமைவதுடன் மட்டுமல்லாமல், நாட்டில் புதிய மாங்கனீசு சுரங்கங்களைத் திறப்பதற்கான அடித்தளமாகவும் செயல்படும்.

நிறுவனத்தின் வரிக்கு முந்தைய மற்றும் வரிக்குப் பிந்தைய லாபம் முறையே  ரூ. 334.45 கோடி மற்றும் ரூ 250.59 கோடியாகும். நிறுவனம்  பரிந்துரைத்த ஆண்டிற்கான மொத்த ஈவுத்தொகை ஒரு பங்கிற்கு ரூ. 3.69 ஆகும்.

******

AD/PKV/KRS


(रिलीज़ आईडी: 1928141) आगंतुक पटल : 179
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Telugu , English , Marathi , हिन्दी , Punjabi