உள்துறை அமைச்சகம்
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்துவைத்ததற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
28 MAY 2023 3:30PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த கட்டடம் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான இடமாக மட்டுமல்லாமல் அமிர்தகாலத்தின் போது ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் இந்தியாவின் பயணத்தின் தொடக்கப் புள்ளியாகவும் உள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டடம் நாட்டின் கனவை நிறைவேற்றிய கட்டுமானத் தொழிலாளர்களின் (ஷ்ரம் யோகி) கடின உழைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் நிறுவப்பட்டது இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்திற்கும் தற்காலத்திற்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்கியுள்ளது.
நமது வளமான கலாச்சாரத்தில் நீதியின் நற்பண்புகளின் முக்கியத்துவத்தைப் பற்றி இது இந்தியாவின் வரும் தலைமுறையினருக்கு தொடர்ந்து நினைவூட்டும்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்துவைத்ததற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளதாக திரு அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த கட்டடம் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான இடம் மட்டுமல்ல, அமிர்த காலத்தின் போது ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் இந்தியாவின் பயணத்தின் தொடக்கப் புள்ளியாகவும் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டும் நாட்டின் கனவை சாதனை நேரத்தில் நிறைவேற்றிய கட்டுமானத் தொழிலாளர்களின் (ஷ்ரம் யோகிகளின்) கடின உழைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு துறை அமைச்சருமான அமித்ஷா நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியால் நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் நிறுவப்பட்டது இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்திற்கும் அதன் நிகழ்காலத்திற்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்கியுள்ளது என்றும், நமது செழுமையான கலாச்சாரத்தில் நீதியின் நற்பண்புகளின் முக்கியத்துவத்தை இது இந்தியாவின் வரவிருக்கும் தலைமுறையினருக்கு தொடர்ந்து நினைவூட்டுவதாக இருக்கும் என்றும் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
***
AD/CJL/DL
(Release ID: 1927886)
Visitor Counter : 181