ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மருந்துத் துறையின் முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகளின் மாநாட்டில் உரையாற்றினார்

Posted On: 27 MAY 2023 1:20PM by PIB Chennai

வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் உலகில் நமது இருப்பை நிலைநிறுத்துவதற்கும் போட்டித்தன்மையின் அளவை நாம் பராமரிக்க வேண்டும்: டாக்டர் மன்சுக் மாண்டவியா

 

'உலகின் மருந்தகம்' என்ற நமது நிலையைத் தக்கவைக்க ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் அதிக கவனம் செலுத்தி தரம் மற்றும் குறைந்த செலவிலான உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்: டாக்டர் மன்சுக் மாண்டவியா

 

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெறும் 8வது சர்வதேச மருந்து மற்றும் மருத்துவ சாதனத் துறை மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று நாட்டின் முன்னணி மருந்துத் துறை தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் கூட்டம் நடைபெற்றது. மருந்துத் துறை செயலாளர் திருமதி எஸ் அபர்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

தொழில்துறையின் வளர்ச்சி வேகத்தை பாராட்டிய அமைச்சர், "தொழில்துறை விரைவான வேகத்தில் முன்னேறி வருகிறது, மேலும் 'உலகின் மருந்தகம்' என்ற நமது நிலையைப் பராமரிக்க, ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் தரம் மற்றும் குறைந்த செலவிலான உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். தற்போதைய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பங்குதாரர்களை வலியுறுத்தினார். வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் உலகில் நமது இருப்பை நிலைநிறுத்துவதற்கும் போட்டித்தன்மையின் அளவை நாம் பராமரிக்க வேண்டும்.

 

அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் தீர்மானத்தை வலியுறுத்திய மத்திய சுகாதார அமைச்சர், தேசத்தின் முன்னேற்றத்திற்கு அரசும் தொழில்துறையும் முழுமையாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

 

டாக்டர் மாண்டவியா பங்குதாரர்களுக்கு அரசின் ஆதரவைத் தெரிவித்து, விலை நிர்ணயம், ஒழுங்குமுறை, கொள்கை மற்றும் செயல்முறை ஆகிய அம்சங்களை எடுத்துரைத்து அந்தந்த செயல் புள்ளிகளுடன் விரிவான விளக்கத்தையும் ஆலோசனைகளையும் முன்வைக்க அழைப்பு விடுத்தார்.

 

இந்த மாநாட்டில் சர்வ தேச சந்தையில் முன்னணியில் உள்ள 60க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு தொழில்துறை பங்குதாரர்கள், கல்வியாளர்கள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

***

AD/CJL/DL


(Release ID: 1927708) Visitor Counter : 172