வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

எனது வாழ்க்கை முறை எனது தூய நகரம்


சுற்றுச்சூழலுக்கான தூய்மையும், வாழ்க்கை முறையும்

பயன்படுத்தப்படாத பொருட்களை லட்சக்கணக்கான மக்கள் ஆர்ஆர்ஆர் எனும் குறைத்திடு, மீண்டும் பயன்படுத்து, மறுசுழற்சி செய் மையங்களில் வழங்குகிறார்கள்

Posted On: 26 MAY 2023 2:08PM by PIB Chennai

குடிமக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் தூய்மைப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். குறைத்திடு, மீண்டும் பயன்படுத்து, மறுசுழற்சி செய் என்பது நகர்ப்புற தூய்மை மற்றும் எனது வாழ்க்கை எனது தூய நகரம் என்பதன் உள்ளார்ந்த பகுதியாக உள்ளது. மேலும் மக்களால் மேற்கொள்ளப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இதுவரை நாடு முழுவதும் குறைத்திடு, மீண்டும் பயன்படுத்து, மறுசுழற்சி செய் எனும் ஆர்ஆர்ஆர் மையங்கள் 13,000 இடங்களில் திறக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு 17 லட்சத்திற்கும் அதிகமான குடிமக்கள் தாமாக முன்வந்து பயன்படுத்தப்படாத பொருட்கள், பழைய புத்தகங்கள், துணிகள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை வழங்கியுள்ளனர். இவை மறுபயன்பாட்டுக்காக மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

கர்நாடகாவின் ராய்ப்பூர் மக்கள், கிட்டார், ஆர்மோனியம் போன்ற இசைக்கருவிகளை ஆர்ஆர்ஆர் மையத்திற்கு வழங்கியுள்ளனர். இதே போல் மத்தியப்பிரதேசத்தின் கண்ட்வாவில் பல்வேறு மகளிர் குழுக்கள் வீடு வீடாகச் சென்று பழைய துணிகள், காலணிகள் போன்றவற்றை சேகரித்து ஆர்ஆர்ஆர் மையங்களுக்கு வழங்கியுள்ளனர். இத்தகைய மையங்களை மக்களிடையே பிரபலப்படுத்த மனிதச்சங்கிலி, ஓவியப்போட்டி, பழைய டயர்களில் ஓவியங்கள் வரைதல் போன்ற உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.

******

AD/SMB/RR/KPG



(Release ID: 1927534) Visitor Counter : 119