பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் இந்தியா எல்லையற்ற இடங்களைக் கடந்து வந்துள்ளது; இதற்கு முந்தைய சுமார் 60 ஆண்டுகளில் செய்யப்பட்ட முன்னேற்றத்தையும் விண்வெளித் துறை பாய்ச்சல் வேகத்தில் விஞ்சியுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

Posted On: 26 MAY 2023 3:59PM by PIB Chennai

கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் இந்தியா எல்லையற்ற இடங்களைக் கடந்து வந்துள்ளது என்று மத்திய அறிவியல்,  தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை   இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

புதுதில்லியில் இன்று இந்தியப் பாதுகாப்புத் துறை மாநாடு 2023-ல் உரையாற்றிய அவர், பாதுகாப்புத் தளவாடங்களுக்கு உள்நாட்டு வடிவமைப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தியை ஊக்கப்படுத்த கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு கொள்கை முன்முயற்சிகளைப் பிரதமர் மோடி மேற்கொண்டதாகவும் இதன் மூலம் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு இந்தியாவை மேம்படுத்தியிருப்பதாகவும் கூறினார். இதன் விளைவாக முந்தைய சுமார் 60 ஆண்டுகளில் செய்யப்பட்ட முன்னேற்றங்களை விண்வெளித் துறை பாய்ச்சல் வேகத்தில் விஞ்சியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறையும், விண்வெளித்துறையும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்றும், இவற்றின் துரிதமான, உள்நாட்டு தன்மையுள்ள வளர்ச்சியை இணைப்பதில் உள்ள கொள்கை இடைவெளிகளை குறைக்கவும் பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.

விண்வெளித்துறை பற்றி குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், இது தனியார் பங்கேற்புக்கு திறந்து விடப்பட்டுள்ளது என்றும், இதனால் 3 ஆண்டுகளுக்குள் நூற்றுக்கும் அதிகமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளன என்றும் கூறினார். 2017-ல் சார்க் செயற்கைக்கோள் இயக்கத்தில் தொடங்கி லார்சன் அண்ட் டப்ரோ, எச்ஏஎல் ஆகியவற்றின் மூலம் 5 பிஎஸ்எல்வி சிறப்பு வாகனங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன என்றும், ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

நமது இளைய மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களின் பலத்தாலும் புதியன கண்டுபிடிக்கும் ஆற்றலாலும் வரும் காலத்தில் உலகளாவிய விண்வெளித் தொழில்நுட்பத்தில் இந்தியா தலைமையேற்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

 

******

AD/SMB/RR/KPG


(Release ID: 1927529) Visitor Counter : 176