சுரங்கங்கள் அமைச்சகம்
மத்திய சுரங்க அமைச்சகம் மும்பை ஐஐடியுடன் இணைந்து முதலாவது சுரங்க புத்தொழில் உச்சி மாநாட்டை மே 29 ஆம் தேதி நடத்துகிறது
प्रविष्टि तिथि:
26 MAY 2023 11:51AM by PIB Chennai
மத்திய சுரங்க அமைச்சகம் மும்பை ஐஐடியுடன் இணைந்து முதலாவது சுரங்க புத்தொழில் உச்சி மாநாட்டை மே 29 ஆம் தேதி மும்பையில் நடத்துகிறது.
சுரங்கம் மற்றும் உலோகக் கலவைத்துறையின் திறன்களை மேம்படுத்தவும், இவற்றில் புதுமை தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதை இலக்காக கொண்டும், இந்த உச்சிமாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 120க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனத்தினர் மற்றும் 20 பெரிய தொழில் நிறுவனத்தினர் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
தானியங்கி தொழில்நுட்பம், ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளம் தொழில் முதலீட்டாளர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். கனிமவள நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் நிறைவு அமர்வில் மத்திய சுரங்கத்துறை இணையமைச்சர் ராவ் சாகிப் பட்டீல் தன்வே பங்கேற்க உள்ளார்.
******
SM/PLM/MA/KPG
(रिलीज़ आईडी: 1927446)
आगंतुक पटल : 231