நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

நிதி ஆயோக் 8-வது ஆட்சிக்குழு கூட்டத்தை நடத்த உள்ளது

प्रविष्टि तिथि: 25 MAY 2023 4:13PM by PIB Chennai

2023 மே 27-ம் தேதியன்று, புது தில்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள புதிய மாநாட்டு மையத்தில், ‘மேம்பட்ட இந்தியா @ 2047: ஒன்றுபட்ட இந்தியாவின் பங்கு' என்ற கருப்பொருளில் நிதி ஆயோக்கின் 8-வது ஆட்சிக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது, (i) மேம்பட்ட இந்தியா @ 2047, (ii) எம்எஸ்எம்இ-க்களின் வளர்ச்சி, (iii) உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள், (iv) இணக்கங்களைக் குறைத்தல், (v) பெண்களுக்கு அதிகாரமளித்தல், (vi) திறன் மேம்பாடு (viii) வட்டார வளர்ச்சி ஆகிய எட்டு தலைப்புகளில் நாள் முழுவதும் விவாதிக்கப்படும்.

இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். நிதி ஆயோக் தலைவர் என்ற முறையில், பிரதமர் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்குவார்.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக, இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் விரைவான வளர்ச்சியை அடையக்கூடிய பொருளாதார வளர்ச்சிப் பாதையில் உள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி மாநிலங்களின் வளர்ச்சியுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. இந்த 8-வது ஆட்சிக்குழு கூட்டம், மத்திய-மாநில அரசுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், 2047-ம் ஆண்டில் மேம்பட்ட இந்தியா என்ற இலக்கை அடைவதற்கான ஒற்றுமையை உருவாக்குவதற்கும் தளத்தை வழங்கும்.

                                      ------

SM/CR/KPG


(रिलीज़ आईडी: 1927350) आगंतुक पटल : 354
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Telugu