வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகர்ப்புறக் குடியிருப்புகளில் பருவநிலை மாற்றத்தின் சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களை எடுத்துக்காட்டும் நகர்ப்புற பருவநிலைத் திரைப்படவிழா

Posted On: 24 MAY 2023 2:01PM by PIB Chennai

நகர்ப்புற பருவநிலை திரைப்பட விழா முதல் முறையாக கொல்கத்தாவின் நியூ டவுனில் 2023 மே 3 முதல் 5 வரை நடைபெறவுள்ளது. நகர்ப்புறக் குடியிருப்புகளில் பருவநிலை மாற்றத்தின் சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களை பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கும் சக்திமிக்க ஊடகமாகப் பயன்படுத்துவது இதன் நோக்கமாகும்.

இந்தத் திரைப்பட விழாவில் 12 நாடுகளில் இருந்து 16 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. பொது மக்களிடமிருந்து கருத்துக்களை பெறுவதற்காக திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் கேள்வி, பதில் வடிவிலான உரையாடலும் இடம்பெறும். பிரதமரின் லைஃப் இயக்க அறைகூவலுக்கேற்பவும், ஜி20-ன் பகுதியான நகர்ப்புறம்20 என்பதன் முன்னுரிமைப் பிரிவில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நடத்தை என்பதை குடிமக்கள் மேற்கொள்ள ஊக்கப்படுத்துவதாகவும் இது இருக்கும்.

 மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், பிரெஞ்ச் மேம்பாட்டு முகமை, ஐரோப்பிய ஒன்றியம், நியூ டவுன் கொல்கத்தா பசுமை பொலிவுறு நகரக்கழகம் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த விழா நடைபெறுகிறது.

இந்த விழாவுக்காக விடுக்கப்பட்ட உலகளாவிய அழைப்புக்கு மாபெரும் வரவேற்பு கிடைக்கப்பெற்று 20 நாடுகளைச் சேர்ந்த 150 திரைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.  இவற்றில் இருந்து 3 நடுவர்கள் மூலம்  விழாவில் திரையிடும் திரைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டன.

உலகச் சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5, அன்று நிறைவு விழா நடைபெறும். இதில் கொல்கத்தாவில் உள்ள பிரான்ஸ் துணைத்தூதர் திரு டிடியர் தல்பைன் பங்கேற்கவுள்ளார்.  இந்த விழா பற்றிய விவரங்களை https://citiis.niua.in/event/urbanclimatefilmfestival என்ற இணையதளத்தில் காணலாம்.

 

******

AP/SMB/AG/KRS


(Release ID: 1926963) Visitor Counter : 132