இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேசத்தின் கௌதம புத்தா நகரில் மே 23 அன்று கபடி விளையாட்டுடன் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி 2022 தொடங்கியது

प्रविष्टि तिथि: 24 MAY 2023 1:00PM by PIB Chennai

உத்தரப்பிரதேசத்தின் கௌதம புத்தா நகரில் உள்ள எஸ்விஎஸ்பி விளையாட்டு வளாகத்தில் ஏராளமான ரசிகர்களிடையே மே 23 அன்று கபடி விளையாட்டுடன் உத்தரப்பிரதேச கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி 2022-ன் முதல்நாள் ஆட்டம் தொடங்கியது.

போட்டி தொடங்குவதற்கு முன் அந்தப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உத்தரப்பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சர் திரு பிரிஜேஷ் சிங் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தொடக்க நாளில் நான்கு சுற்று கபடிப் போட்டிகள் நடைபெற்றன.  மகளிருக்கான முதல் லீக் போட்டியில் சௌத்ரி ரன்பீர் சிங் பல்கலைக்கழக அணி வெற்றிபெற்றது. இரண்டாவதுப் போட்டியில் சிம்லாவில் உள்ள இமாச்சலப் பிரதேசப் பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது.

ஆடவர் பிரிவின் முதலாவதுப் போட்டியில் தல்வாண்டி சாபோவின் குரு காசி பல்கலைக்கழக அணியும், இரண்டாவதுப் போட்டியில் கோட்டா பல்கலைக்கழக அணியும் வெற்றிபெற்றன.

இந்தப் போட்டியின் அதிகாரபூர்வ தொடக்கவிழா 2023 மே 25 அன்று நடைபெறும். 21 விளையாட்டுப் போட்டிகளில் 200 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 4000-க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்வார்கள்.

******

AP/SMB/AG/KRS


(रिलीज़ आईडी: 1926880) आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu , Malayalam