மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மத்திய அரசின் நிதியுதவி பெறும் கல்விநிறுவனங்களின் உட்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் திரு.தர்மேந்திரபிரதான் ஆய்வு
Posted On:
19 MAY 2023 4:32PM by PIB Chennai
ஐஐடிகள், ஐஐஎம்கள், ஐஐஎஸ்இஆர்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் உட்பட 43 உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெற்று வரும் உட்கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்கு மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் இன்று தலைமை தாங்கினார். அதேபோல், நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோத்யா வித்யாலயா போன்ற பள்ளிக் கல்வியின் கீழ் உள்ள நிறுவனங்களின் திட்டங்களும் மதிப்பாய்வு செய்யப்பட்டன.
இந்த சந்திப்பின் போது, இந்த ஆண்டு இறுதிக்குள் உட்கட்டமைப்பு திட்டங்களை விரைவுபடுத்தி முடிக்க உயர் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் திரு.பிரதான் உத்தரவிட்டார். 21-ம் நூற்றாண்டின் குடிமக்களை உருவாக்கும் முயற்சிகளுக்கு உத்வேகம் அளிக்கும் நவீன உட்கட்டமைப்பு விரைவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று அவர் கூறினார்.
இந்த புதிய திட்டங்கள் ஆய்வகங்கள், விடுதிகள் மற்றும் பல்வேறு ஐஐடிகள், ஐஐஐடிகள், ஐஐஎம்கள், ஐஐஎஸ்இஆர்கள் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களின் மாணவர்களுக்கான கல்விசார் செயல்பாடுகளை உள்ளடக்கியது.
(Release ID : 1925520)
******
(Release ID: 1925634)