ஆயுஷ்
ஆயுஷ் எனப்படும் பாரம்பரியமருத்துவத்தின் பலன்களை தேசிய ஆயுஷ் இயக்கம் மூலம் பெரும்பாலானோர் பயனடைய ஏதுவாகஆயுஷ் உள்கட்டமைப்பு வசதிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பலப்படுத்தவேண்டும்
प्रविष्टि तिथि:
19 MAY 2023 5:19PM by PIB Chennai
தேசிய ஆயுஷ் இயக்க மாநாடு 2023 -ன் வட்டமேசை விவாதத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இரண்டு நாள் மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த விவாதத்தில், ஆயுஷ் எனப்படும் பாரம்பரிய இந்திய மருத்துவத்தின் பலன்களை தேசிய ஆயுஷ் இயக்கம் வாயிலாக பெரும்பாலானோர் பயனடைய ஏதுவாக ஆயுஷ் உள்கட்டமைப்பு வசதிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மத்திய ஆயுஷ், துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், அத்துறையின் இணையமைச்சர் டாக்டர் முஞ்ச்பாரா மகேந்திரபாய், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கோவா, ஜார்க்கண்ட், உத்தராகண்ட், அசாம், மிசோரம், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
விவாதத்தில் பேசிய அமைச்சர் சோனாவால், பழமை வாய்ந்த பாரம்பரிய மருத்துவமான ஆயுஷ் மருத்துவ முறையை முன்னெடுத்து செல்ல மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். யோகப் பயிற்சிக்கு அனைத்து மாநிலங்களும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், அப்போது தான் அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்பதை உறுதி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.
******
AD/ES/RS/KRS
(रिलीज़ आईडी: 1925606)
आगंतुक पटल : 159