சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மூன்றாவது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் மே 21 அன்று மும்பையில் ஜி20 மெகா கடற்கரை தூய்மை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது

प्रविष्टि तिथि: 19 MAY 2023 12:39PM by PIB Chennai

இந்தியாவின் ஜிG20 தலைமைத்துவத்தின்  கீழ்சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழுவால்  அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைகளில் "நிலையான, வளமான பருவநிலையை உருவாக்கும்  நீலப் பொருளாதாரத்தை ஊக்குவித்தலும்"  ஒன்றாகும்.

3வது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழு  கூட்டம்  ஜி20 மெகா கடற்கரை தூய்மை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.  மே 21 அன்று மும்பை ஜூஹு கடற்கரையில்  காலை 7 மணி முதல் இரண்டு மணி நேரம் இந்த தூய்மை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஜி20 பணிக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள். இதில், பருவநிலை மாற்றத்தின் சவால்களைச் சமாளிப்பதில் சமூகப் பங்கேற்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சாரத்தை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம்புவி அறிவியல் அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுத்த  திட்டமிடப்பட்டுள்ளது.

9 கடலோர மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட கடற்கரைகளில் கடற்கரையை சுத்தம் செய்யும் பிரச்சாரம் நடைபெறும். இதுமட்டுமின்றி, G20 மற்றும் இந்திய G20 தலைமையின் கீழ் அழைக்கப்பட்ட நாடுகள் உட்பட 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் கடற்கரையைச் சுத்தம் செய்யும் பிரச்சாரத்துக்கு  இந்திய தூதரகங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு இடையேயான ஓவியப் போட்டி, கடல் சூழலைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழி, கழிவு மறுசுழற்சியை ஊக்குவித்தல் போன்றவற்றை உள்ளடக்கி, உள்ளூர் சமூகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. கடல் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைத் தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க மக்களை ஊக்குவிக்கவும் 5900க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் அகில இந்திய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

******

AD/PKV/KRS


(रिलीज़ आईडी: 1925483) आगंतुक पटल : 292
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी