உள்துறை அமைச்சகம்
ஜி20 நாடுகளின் பேரிடர் இடர்பாடு குறைப்பு பணிக்குழுவின் இரண்டாவது கூட்டம் மும்பையில் மே 23 முதல் 25 வரை நடைபெறுகிறது
Posted On:
18 MAY 2023 6:10PM by PIB Chennai
மழைக்காலங்களில் மும்பையில் கனமழை பெய்து தண்ணீர் தேங்குவது தெரிந்ததாகும். கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதியன்று மும்பையில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலர் உயிரையும், சொத்துக்களையும் இழந்தனர். மும்பையில் 2023, மே 23 முதல் மே 25 வரை ஜி20 நாடுகளின் பேரிடர் இடர்பாடு குறைப்பு பணிக்குழுவின் இரண்டாவது கூட்டம் நடைபெறுகிறது. அப்பகுதி குழுவினர் பம்பாய் மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று அங்கு அதிக கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கின் போது மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் குறித்து காண உள்ளனர்.
******
AD/IR/MA/KRS
(Release ID: 1925316)
Visitor Counter : 218