சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, சுகாதாரம்மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கான வருடாந்திர திறன் மேம்பாட்டுத் திட்டத்தைவெளியிட்டார்
Posted On:
17 MAY 2023 6:09PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்கான வருடாந்திர திறன் மேம்பாட்டுத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மாண்டவியா, பல்வேறு அரசு நிறுவனங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த மிஷன் கர்மயோகியை பிரதமர் தொடங்கி வைத்தபோது, “இந்தியாவில் திறன்களுக்குக் குறைவில்லை, ஆனால் விரும்பிய இலக்கை அடைய அதைப் பயன்படுத்த வேண்டியது அவசியம்” என்று கூறியதை நினைவு கூர்ந்தார். அரசின் திறன் மேம்பாட்டு அமைப்பை புதுப்பித்து புத்துயிர் அளிக்க வேண்டிய அவசியம் எனவும், இந்த முயற்சி மக்கள் பணியை வலுப்படுத்துவதற்கான பாதையாக கருதப்படுகிறதென டாக்டர் மாண்டவியா கூறினார்.
பயிற்சி நிறுவனங்கள் மற்றவர்களுக்கு கற்பிப்பதற்கு முன், முதலில் தங்கள் திறனை மேம்படுத்த வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் அறிவுறுத்தினார். மேம்பட்ட திறன் மூலம், தனிநபர்கள் தன்னம்பிக்கையைப் பெற்று சிறந்த சாதனைகளைப் படைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்
அனைத்து அரசு ஊழியர்களும் மக்களுக்கு முக்கிய சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சுகாதார சேவைகள் கடைசி குடிமகனுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய சுகாதார சேவைகளில் அவர்களின் பங்கு மிக முக்கியமானது என்று டாக்டர் பாரதி பிரவின் பவார் கூறினார்.
பின்னணி:
2020 செப்டம்பரில், தொழில்நுட்ப ஆர்வமுள்ள, திறமையான, அக்கறையுள்ள அரசு ஊழியர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், 'அரசுப் பணியாளர்கள் திறன் மேம்பாட்டுக்கான தேசிய திட்டம் என்று அழைக்கப்படும் 'மிஷன் கர்மயோகி'யை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
******
(Release ID: 1924971)
Visitor Counter : 190