அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நீடித்த நீலப்பொருளாதாரத்திற்கான அறிவியல் சார்ந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த ஜி20 ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் முன்னெடுப்புத் திறள் மாநாடு டையூவில் நாளை நடைபெறுகிறது

Posted On: 17 MAY 2023 4:38PM by PIB Chennai

நீடித்த நீலப்பொருளாதாரத்திற்கான அறிவியல் சார்ந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த ஜி20 ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் முன்னெடுப்புத் திறள் மாநாடு டையூவில் 2023, மே 18 அன்று (நாளை) நடைபெறுகிறது.

இம்மாநாடு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் டாக்டர் ஸ்ரீவரி சந்திரசேகர் தலைமையில் நடைபெறவுள்ளது. 35-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள், 40 இந்திய நிபுணர்கள், பிரதிநிதிகள், விருந்தினர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீடித்த நீலப்பொருளாதாரத்திற்கான வாய்ப்புகள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

சமத்துவமிக்க சமூகத்திற்கான ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் என்பது இம்மாநாட்டில் முக்கிய கருப்பொருளாகும்.

******

AP/IR/AG/KRS



(Release ID: 1924873) Visitor Counter : 155