பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

8-வது அகில இந்திய ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்றது, துறைகளுக்கு இடையேயான ஆலோசனையின் மூலம் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த 50 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டன

Posted On: 17 MAY 2023 4:06PM by PIB Chennai

8-வது அகில இந்திய ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்றது, துறைகளுக்கு இடையேயான ஆலோசனையின் மூலம் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த 50 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டன.

இம்முகாமில் பங்கேற்ற ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை செயலாளர் திரு ஸ்ரீனிவாஸ், 12-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு நேரடியாக  தாமே தலையிட்டு விசாரித்தார். பாதுகாப்பு, சுகாதாரம், விமானப்போக்குவரத்து, தபால், தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைகளிடமிருந்து அறிக்கைகளைக் கேட்டறிந்தார்.

 இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீனிவாஸ் ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாமின் ஒருபகுதியாக அதிகாரிகளுக்கான ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டமும் இன்று நடைபெறுவதாகக் கூறினார்.  முதல் முறையாக ஓய்வூதிய நிதியை அளிக்கும் அனைத்து 18 வங்கிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தங்களது சேவைகளை எடுத்துரைப்பதாகத் தெரிவித்தார். அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த 120 அதிகாரிகள் அடுத்த 12 மாதங்களில் ஓய்வு பெறவுள்ளதை அடுத்து ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 70 இடங்களில் காணொளிக் காட்சி வாயிலாக ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம், அமைச்சகங்கள், துறைகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுவரை நடைபெற்ற 7 ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம்கள் மூலம் 24,218 வழக்குகளில், 17,235 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

******

AP/IR/AG/KRS




(Release ID: 1924855) Visitor Counter : 191