தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
விண்வெளித் தகவல் தொடர்பு சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு" குறித்த ட்ராயின் ஆலோசனைக் குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
17 MAY 2023 1:55PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2023 ஏப்ரல் 06-ம் தேதியன்று “விண்வெளித் தகவல் தொடர்பு சேவைகளுக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு” குறித்த ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்டது. இது குறித்து எழுத்துப்பூர்வ கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான கடைசித் தேதி 2023 மே 04-ம் தேதி என்றும், எதிர் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான கடைசித் தேதி 2023 மே 18-ம் தேதி என்றும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த கருத்துகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதிகளை முறையே 2023 ஜூன் 01 மற்றும் 2023 ஜூன் 15 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்/எதிர் கருத்துகள் ஸ்ரீ அகிலேஷ் குமார் திரிவேதி, ஆலோசகர் (நெட்வொர்க்குகள், அலைக்கற்றை மற்றும் உரிமம்), TRAIக்கு அனுப்பப்படலாம், முன்னுரிமை மின்னணு வடிவத்தில் advmn@trai.gov.in. +91-11-23210481 என்ற தொலைபேசி எண்ணில் ஏதேனும் தெளிவு/தகவல்களுக்கு அவரைத் தொடர்புகொள்ளலாம்.
கருத்துகள்/எதிர் கருத்துகளைத் தெரிவிக்க ட்ராயின் ஆலோசகரான திரு.அகிலேஷ் குமார் திரிவேதியை advmn@trai.gov.in. என்ற மின்னஞ்சலிலோ, +91-11-23210481 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் ; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1924710
******
(Release ID:1924710)
AP/CR/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1924819)
வருகையாளர் எண்ணிக்கை : 193