மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பிரதமரின் மத்ஸய சம்படா திட்டத்தின் கீழ், தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில் ஏழு முக்கிய கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது
Posted On:
16 MAY 2023 5:26PM by PIB Chennai
பிரதமரின் மத்ஸய சம்படா திட்டத்தின் (பிஎம்எம்எஸ்ஒய்) கீழ், ஏழு முக்கிய கள ஆய்வுகளை தன்னாட்சி அமைப்பான தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில் என்பிசி மேற்கொண்டுள்ளது. புதுதில்லியில் உள்ள என்பிசி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தக்கள ஆய்வுகளைத் தொடங்கி வைத்து பேசிய மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபலா, நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியின் பங்களிப்பை உயர்த்துவதில் பிரதமரின் இந்தத் திட்டம் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், அரசின் புதுமையான மற்றும் செயல்திறன் மிக்க நடவடிக்கைகள் ஒரு புதிய நீலப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன என்றும் கூறினார்.
என்பிசி சுமார் ஒன்பது மாதங்களில் இந்தக்கள ஆய்வுகளை நிறைவு செய்யும். 1958 இல் அமைக்கப்பட்ட தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில், இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=192454
******
AP/KPV/KRS
(Release ID: 1924594)
Visitor Counter : 166