தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2023 மார்ச் மாதத்தில் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் 17.31 லட்சம் புதிய தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்

Posted On: 15 MAY 2023 6:57PM by PIB Chennai

இஎஸ்ஐசி-யின் தற்காலிக ஊதிய தரவுகளின்படி, 2023 மார்ச் மாதத்தில் 17.31 லட்சம் புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2023 மார்ச் மாதத்தில் சுமார் 19,000 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு, தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்த மாதத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட 17.31 லட்சம் ஊழியர்களில், 25 வயதுக்குட்பட்ட 8.26 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இந்தத் தரவுகள் நாட்டில் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றன. இந்த மாதத்தில் சேர்க்கப்பட்ட மொத்த ஊழியர்களில் 48% பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.

பாலின வாரியான ஊதியத் தரவுகளின் பகுப்பாய்வின்படி, 2023 மார்ச் மாதத்தில் 3.36 லட்சம் பெண் உறுப்பினர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, 2023 மார்ச் மாதத்தில் மொத்தம் 41 திருநங்கைகள் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர்.

 

 

******

AP/CR/KPG

 


(Release ID: 1924317) Visitor Counter : 183