புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வாயிலாக எரிசக்தி பகிர்மானத்தை வேகப்படுத்த இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் உறுதிபூண்டுள்ளது: திரு பூபேந்திர சிங் பாலா
Posted On:
15 MAY 2023 6:59PM by PIB Chennai
சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வாயிலாக எரிசக்தி பகிர்மானத்தை வேகப்படுத்த இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் உறுதிபூண்டிருப்பதாக மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகச் செயலாளர் திரு பூபேந்திர சிங் பல்லா தெரிவித்துள்ளார்.
ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக மூன்றாவது எரிசக்தி பகிர்மான பணிக்குழுக்கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.
“குறைந்த செலவிலான நிதி சார்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பிலான இந்தக் கூட்டத்தை மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, இந்திய புதுப்பிக்கத்தக் எரிசக்தி மேம்பாட்டு முகமை, சர்வதேச புதுப்பிக்கத்தக்க முகமை ஆகியவை இணைந்து நடத்தின.
இக்கூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகச் செயலாளர் திரு பூபேந்திர சிங் பல்லா, எரிசக்தி பகிர்மானம் என்பது தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார அடிப்படையில், சாத்தியமானதாக உள்ளது. அதேபோன்று இதனால் ஏற்படக்கூடிய பலன்கள் அதற்கு செலவிடப்படும் தொகையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது என்று கூறினார்.
******
AP/ES/RS/KPG
(Release ID: 1924312)
Visitor Counter : 184