விவசாயத்துறை அமைச்சகம்

ஹைதராபாத்தில் ஒருங்கிணைந்த உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் திறந்து வைத்தார்

Posted On: 15 MAY 2023 4:58PM by PIB Chennai

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தேசியத் தாவர சுகாதார மேலாண்மை நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் திறந்து வைத்தார்.  

விழாவில் பேசிய அமைச்சர், பூச்சிகளைக் கட்டுப்படுத்த உயிரியல் முறைகளைக் கையாள வேண்டும் என வலியுறுத்தினார். சாகுபடி செலவைக் குறைக்கவும், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும், பூச்சிக்கொல்லி மருந்துகளிலில் இருந்து மண் வளத்தைப் பாதுகாக்கவும், பலவிதமானப் பயிர்களைப்  பயிரிடுவது அவசியம் என்று குறிப்பிட்டார். ஆய்வகங்களில் கண்டுப்பிடிக்கப்படும் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்வது முக்கியம் என்ற போதிலும், அவை சார்ந்த குறைந்தபட்ச தகவல்களையாவது விவசாயிகள் தெரிந்து கொண்டால் மட்டுமே இந்தப் புதிய தொழில் நுட்பங்களின் பயனை அடைய முடியும் என்று கூறினார்.

வெளிநாட்டு சந்தையில் நம்நாட்டின் தயாரிப்புகளின் அங்கீகாரத்தை தொடர வேண்டுமானால், இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் விவசாய அத்தியாவசியப் பொருட்களின் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் எந்தவொரு பூச்சிக்கொல்லியும் ஏற்றுமதி செய்யக்கூடாது எனவும் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில், மத்திய வேளாண்துறை செயலாளர் அகுஜா, தெலங்கானா மாநில வேளாண் துறை செயலாளர் திரு ரகுநந்தன் ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

இந்தப் புதிய ஒருங்கிணைந்த உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் அதிநவீன வசதிகளை உள்ளடக்கியது. இந்த ஆய்வகம் அமைந்துள்ள தாவர சுகாதார மேலாண்மை நிறுவனம்,  நீடித்த வேளாண்மைக்கான பயிற்சிகளையும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பூச்சிக்கொல்லி மேலாண்மை, உயிரி பூச்சிக்கொல்லிகள், உயிரி உரங்கள் ஆகியவற்றை முன்னிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு விதமான பயிர்களில் ஏற்படும் நோய் மேலாண்மை, பூச்சிக்கொல்லிகள் குறித்த பயிற்சி முகாம்களை அளித்து வருகிறது. இந்த முகாம்களில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள், அறிவியல் வல்லுனர்கள், வேளாண் அறிவியல் நிலையங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும்  வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள், விவசாயிகள், தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.

 

******

AP/ES/RS/KPG



(Release ID: 1924300) Visitor Counter : 128


Read this release in: English , Urdu , Hindi , Telugu