பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விமானப்படையின் துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் பொறுப்பேற்றுக் கொண்டார்

Posted On: 15 MAY 2023 2:00PM by PIB Chennai

விமானப்படையின் துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சிப் பெற்ற அவர் 1986, டிசம்பர் 6 அன்று போர்ப்படைப் பிரிவில் சேர்ந்தார். பங்களாதேஷில் ராணுவப் படிப்பிலும், புதுதில்லி தேசிய பாதுகாப்புக் கல்லூரியிலும் பட்டப்படிப்பை முடித்தார். போர் விமானத்தில் போர் வீரர், பயிற்சியாளர், சரக்குப் போக்குவரத்து விமானத்தில் பணி என 3,300 மணி நேரங்களுக்கும் மேல் விமானத்தில் பயணித்த அனுபவம் பெற்றவராவார். சேஃப்டு சாகர், ரக்ஷக் ராணுவ நடவடிக்கைகளில் அவர் பங்கேற்றுள்ளார்.

 

******

AP/IR/RR/KPG


(Release ID: 1924172) Visitor Counter : 172