பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்புத் துறையில் ‘தற்சார்பு இந்தியா’: ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 928 உடனடி மாற்றுக் கருவிகள்/துணை அமைப்புகள்/உதிரி பாகங்கள் கொண்ட 4 வது ஆக்கபூர்வ உள்நாட்டுமயமாக்கல் பட்டியலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 14 MAY 2023 9:16AM by PIB Chennai

பாதுகாப்புத் துறையில் '‘தற்சார்பு இந்தியா’'வை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் இறக்குமதியைக் குறைப்பதற்கும், ரூ. 715 கோடி மதிப்புள்ள இறக்குமதி மானியத்துடன்  ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 928 உடனடி மாற்றுக் கருவிகள்/துணை அமைப்புகள்/உதிரி பாகங்கள் கொண்ட  4வது ஆக்கபூர்வ  உள்நாட்டுமயமாக்கல் பட்டியலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சாதனங்களின் விவரங்கள் ஸ்ரீஜன் இணையப்பாக்கத்தில்  (https://srijandefence.gov.in/) கிடைக்கின்றன. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குப் பிறகே இவை இந்தியத்  தொழில்துறையிலிருந்து கொள்முதல் செய்யப்படும்.

 

இந்த நான்காவது உள்நாட்டு மயமாக்கல் பட்டியல் (பிஐஎல்) மாற்றுக் கருவிகள்/துணை அமைப்புகள்/உதிரி பாகங்கள் தொடர்பாக  2021 டிசம்பர், 2022 மார்ச், 2022 ஆகஸ்ட் என ஏற்கனவே வெளியிடப்பட்ட மூன்று பட்டியல்களின் தொடர்ச்சியாகும். ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியல்களில் 2,500 சாதனங்கள் உள்நாட்டுமயம் ஆக்கப்பட்டுள்ளன. மேலும் 1,238  (351+107+780) சாதனங்கள் குறிப்பிட்ட காலவரம்புக்குள் உள்நாட்டுமயம் ஆக்கப்படவுள்ளன. இவற்றில் 310 சாதனங்கள் (1வது பிஐஎல் - 262, 2வது பிஐஎல் - 11, 3வது பிஐஎல் - 37) இதுவரை உள்நாட்டுமயம் ஆக்கப்பட்டுள்ளன.

அறிவிக்கப்பட்ட இந்தப் பொருட்களுக்கான கொள்முதல் நடவடிக்கையை பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் விரைவில் தொடங்கும். இந்த நோக்கத்திற்காகவே தனியாக வடிவமைக்கப்பட்டுள்ள  ஸ்ரீஜன் இணையப்பக்க தகவல்பலகையை (டேஷ்போர்ட்) (https://srijandefence.gov.in/DashboardForPublic) ஆர்வ வெளிப்பாட்டுக்கும்/முன்மொழிவுக்கான கோரிக்கைகளுக்கும் தொழில்துறையினர் காணலாம்; அதிக எண்ணிக்கையில் பங்கேற்க முன்வரலாம்.

***

AD/SMB/DL



(Release ID: 1923984) Visitor Counter : 180