சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

2023 ஹஜ் பயணத்திற்குச் செல்லும் நிர்வாக மற்றும் மருத்துவ பிரதிநிதிகளுக்கு பயிற்சி

Posted On: 13 MAY 2023 2:37PM by PIB Chennai

2023 ஹஜ் பயணத்தில் சவுதி அரேபியாவில் ஹாஜிகளுக்கு சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக மற்றும் மருத்துவப் பிரிவினருக்கு மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் ஏற்பாடு செய்த பயிற்சியை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி இன்று தொடங்கி வைத்தார். இந்தப் பயிற்சியானது புதுதில்லியில் லோதி சாலை பகுதியில் உள்ள ஸ்கோப் வளாக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

மத்திய அரசு இந்த ஆண்டு எடுத்த சில முக்கிய முயற்சிகள் பின்வருமாறு:

 

இந்திய மற்றும் சவுதி அரேபியா இடையேயான இருதரப்பு ஒப்பந்தத்தின்படி இந்த ஆண்டு பதிவு செய்த ஹாஜிகளின் மொத்த எண்ணிக்கை 1.75 லட்சம்.

 

வாளிகள், படுக்கை விரிப்புகள், பெட்டிகள் போன்றவற்றை கட்டாயமாக வாங்குவதால் ஏற்படும் தேவையற்ற செலவுகளை நீக்கி, ஹஜ் தொகுப்பில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.

 

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான ஹஜ் கொள்கையில் சிறப்பு ஏற்பாடுகள்

 

தனியாக வரும் பெண்களை அனுமதிப்பதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல்- அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன (4314).

 

பிரதிநிதிகள் தேர்வு:

 

339 மருத்துவ வல்லுநர்கள் (173 மருத்துவர்கள் மற்றும் 166 துணை மருத்துவர்கள்), 129 நிர்வாகப் பணியாளர்கள் உட்பட மொத்தம் 468 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

468 பிரதிநிதிகளில் 129 பேர் பெண்கள் ஆவர்.

 

முதன்முறையாக, மருத்துவப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் சுகாதார அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

 

ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வரும் பயணிகளின் நலனைக் கவனிப்பதற்காக அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

முதல் முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

****

AD/CR/DL
 



(Release ID: 1923895) Visitor Counter : 158