சுரங்கங்கள் அமைச்சகம்

ஒட்டுமொத்த கனிமவளங்களின் உற்பத்தி 2023 பிப்ரவரி மாதத்தில் 4.6 சதவீதம் அதிகரிப்பு

Posted On: 10 MAY 2023 3:56PM by PIB Chennai

ஒட்டுமொத்த கனிமவளங்களின் உற்பத்தி 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 2023 பிப்ரவரி மாதத்தில் 4.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து இந்திய சுரங்கங்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2022-23-ம் நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை அதன் முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது 5.7 சதவீதம் அதிகரித்ததாக குறிப்பிட்டுள்ளது.

நிலக்கரி உற்பத்தி 861 லட்சம் டன் அளவிற்கும், லிக்னைட் உற்பத்தி 41 லட்சம் டன் அளவிற்கும், பெட்ரோலியம் (கச்சா) 22 லட்சம் டன் அளவிற்கும், பாக்சைட் 1995 ஆயிரம் டன் அளவிற்கும், குரோமைட் 330 ஆயிரம் டன் அளவிற்கும், தாமிரம் 9000 டன் அளவிற்கும், தங்கம் 9 கிலோ அளவிற்கும், இரும்புத்தாது 245 லட்சம் டன் அளவிற்ம், மாங்கனீஸ் தாது 278 ஆயிரம் டன் அளவிற்கும், துத்தநாகம் 144 ஆயிரம் டன் அளவிற்கும், சுண்ணாம்புக்கல் 336 லட்சம் டன் அளவிற்கும், வைரம் 17 காரட் அளவிற்கும்  உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

 

***

AD/IR/AG/KPG



(Release ID: 1923130) Visitor Counter : 152