தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கோடிக்கணக்கான வர்த்தகர்களுக்கு போக்குவரத்து பங்குதாரராகும் இந்திய அஞ்சல் துறை

प्रविष्टि तिथि: 09 MAY 2023 6:27PM by PIB Chennai

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) மற்றும் டிரிப்டா டெக்னாலஜிஸ் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய அஞ்சல் துறை இன்று மத்திய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் திரு.தேவுசின் சவுகான் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், 'பாரத் இமார்ட்' என்ற போர்ட்டலை செயல்படுத்த உதவுகிறது. இது வர்த்தகர்களிடத்திலிருந்து சரக்குகளை எடுத்துச் சென்று, நாடு முழுவதும் மக்களின் வீட்டிலேயே டெலிவரி செய்வதை உறுதி செய்யும். இது சிஏஐடி உடன் தொடர்புடைய எட்டு கோடி வர்த்தகர்களுக்கு பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப காலப்போக்கில் தபால் துறை தன்னை மாற்றிக்கொண்டதாக குறிப்பிட்டார். பெண்கள் அதிகாரமளிப்பதற்காக பிரதமர் திரு.நரேந்திர மோடி அயராது உழைத்து வருவதாகவும், இந்தக் கனவை நனவாக்குவதில் அஞ்சல் துறை முக்கியப் பங்காற்றி வருகிறது எனவும் அவர் கூறினார். செல்வமகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும் அரசின் சிறந்த செயல்திட்டங்களில் ஒன்று எனவும், பெண்களின் வைப்புத்தொகைக்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்கும் மகிளா சம்மன் பச்சத் பத்ரா மிகவும் பிரபலமான திட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய  இணையமைச்சர் தேவுசின் சவுகான் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் போது அஞ்சல் துறை வழங்கிய சிறந்த சேவையை அவர் நினைவு கூர்ந்தார். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் மாற்றியமைக்கக்கூடிய கொள்கைகளை உருவாக்க வேண்டுமென பிரதமர் திரு.நரேந்திர மோடி, தபால் துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், இன்றைய நிகழ்வு உட்பட, தபால் துறையின் ஒவ்வொரு கொள்கையும், செயலும் மேற்கூறிய நோக்கத்திலேயே செயல்படுவதாகவும் திரு.தேவுசின் சவுகான் மேலும் கூறினார்.

சிஏஐடி மற்றும் பாரத் இ-மார்ட் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாட்டில் உள்ள சிறு வணிகர்களுக்குத் தேவையான போக்குவரத்து ஆதரவை வழங்குவதோடு, இது அவர்களின் வணிகங்களையும், வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என்றும் மத்திய இணையமைச்சர் திரு.தேவுசின் சவுகான் நம்பிக்கை தெரிவித்தார்.

 

----

AD/PKV/KPG


(रिलीज़ आईडी: 1922896) आगंतुक पटल : 204
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Telugu