மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து, மைகவ், யுவ பிரதிபா என்னும் பாடல்திறனை அறிமுகப்படுத்துகிறது
Posted On:
09 MAY 2023 4:18PM by PIB Chennai
பல்வேறு வகையான பாடல்களை பாடும் வகைகளில் புதிய மற்றும் இளம் திறமைகளை கண்டறிந்து அங்கீகரிப்பதன் மூலம் தேசிய அளவில் இந்திய இசையை அடிமட்ட அளவில் ஊக்குவிக்கும் நோக்கத்துடன், கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து மைகவ், யுவ பிரதிபா என்னும் பாடல் திறனை மே மாதம் -10ம் தேதி முதல் அறிமுகப்படுத்துகிறது.
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் பாடும் திறமையை வெளிப்படுத்தவும் தேசிய அங்கீகாரத்தைப் பெறவும் இது ஒரு தனித்துவமான வாய்ப்பாகும். புதிய இந்தியாவின் வளர்ந்து வரும் கலைஞர், பாடகர் அல்லது இசைக்கலைஞராக ஒருவர் இருக்க விரும்பினால், யுவ பிரதிபா - பாடும் திறமை வேட்டையில் பங்கேற்று நாட்டுப்புற பாடல்கள், தேசபக்தி பாடல்கள்,சமகால பாடல்கள் போன்ற பல்வேறு வகைகளில் தங்கள் திறமையை நிரூபிக்கலாம். https://innovateindia.mygov.in/ என்ற தளத்தில் போட்டியில் பங்கேற்பது பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
போட்டியில் ஒரு பங்கேற்பாளர் ஒருமுறை மட்டுமே பங்கேற்க முடியும்.
முதல் 3 வெற்றியாளர்கள் புதுதில்லியில் நடைபெறும் இறுதிப்போட்டியில் அறிவிக்கப்படுவார்கள்.
வெகுமதி மற்றும் அங்கீகாரம்:
1வது வெற்றியாளர்: ரூ. 1,50,000/- + கோப்பை + சான்றிதழ்
2வது வெற்றியாளர்: ரூ.1,00,000/- + கோப்பை + சான்றிதழ்
3வது வெற்றியாளர்: ரூ.50,000/- + கோப்பை + சான்றிதழ்
இதைத் தொடர்ந்து வரும் 12 போட்டியாளர்களுக்கு தலா ரூ. 10,000/- ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
வழிகாட்டுதல்: முதல் 3 வெற்றியாளர்களுக்கு உதவித்தொகையுடன் 1 மாத காலத்திற்கு வழிகாட்டுதல் முதல் ஆலோசனைகள் வழங்கப்படும்.
MyGov மக்களை போட்டியில் கலந்துகொண்டு தேசிய அளவில் அங்கீகாரம் பெற அழைக்கிறது. மேலும் விவரங்களுக்கு https://innovateindia.mygov.in/singing-challenge/ ஐப் பார்வையிடவும்.
---
SM/PKV/KPG
(Release ID: 1922887)
Visitor Counter : 180