இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
லக்னோவில் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு 2022- க்கான இலச்சினை, ஜெர்சி போன்றவற்றை அனுராக் சிங் தாக்கூர், யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று அறிமுகப்படுத்தினர்
Posted On:
05 MAY 2023 6:29PM by PIB Chennai
மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், லக்னோவில் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுக்கள் 2022 இன் அதிகாரப்பூர்வ லோகோ, இலச்சினை, ஜோதி, கீதம் & ஜெர்சியை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் திரு அனுராக் சிங் தாக்கூர் பேசுகையில், “நமது பிரதமர் திரு நரேந்திர மோடி கற்பனை செய்த கேலோ இந்தியா இயக்கம் இன்று ஒரு புரட்சியாக இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தை அடைந்துள்ளது எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது. இந்த விளையாட்டுகளில் பங்கேற்கும் பல்கலைக்கழக விளையாட்டு வீரர்கள், வாழ்க்கையின் கடினமான பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கு விளையாட்டு ஒரு சிறந்த பாதை என்பதை அறிவார்கள்’’ என்று கூறினார்.
கூட்டத்தில் உரையாற்றிய திரு யோகி ஆதித்யநாத், “இன்று உத்தரபிரதேச மாநிலத்தின் சுற்றுச்சூழலும் கருத்தும் அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சியுடன் ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது, அதனால்தான் விளையாட்டும், விளையாட்டு வீரர்களும் இங்கு செழித்து வருகிறார்கள். பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களையும், பயிற்சியாளர்களையும் வரவேற்கிறேன்’’ என்று கூறினார்.
***
AD/PKV/DL
(Release ID: 1922180)
Visitor Counter : 167