குடியரசுத் தலைவர் செயலகம்
புத்த பூர்ணிமாவையொட்டி குடியரசுத்தலைவரின் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
04 MAY 2023 5:14PM by PIB Chennai
புத்த பூர்ணிமாவையொட்டி குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
“புத்த பூர்ணிமாவின் இந்த சிறந்த நந்நாளில் குடிமக்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள புத்தரின் போதனைகளை பின்பற்றுவோருக்கு தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பகவான் புத்தர், இரக்கத்தின் அடிப்படையான ஞானம், சகிப்புத்தன்மை மற்றும் நல்லொழுக்கத்தின் பாதையை நமக்குக் காட்டியுள்ளார் என்றும் கூறியுள்ளார். அவரது எளிமையான மற்றும் பயன்மிக்க உபதேசம் அன்பு, உண்மை மற்றும் அகிம்சையின் பாதையில் செல்ல நமக்கு உத்வேகம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மகாத்மா புத்தரின் வாழ்க்கை, சுயக்கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்திற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது என்றும், அவருடைய போதனைகள் இன்றும் மனிதச் சமுதாயத்திற்கு வழிகாட்டியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
இந்தப் புனிதமான நேரத்தில், புத்தரின் போதனைகளை நமது மனம், சொல், செயல் மற்றும் நடத்தையில் ஏற்று, ஒரு புகழ்பெற்ற நாட்டை கட்டியெழுப்ப முயற்சிப்போம்” என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
***
AD/IR/RJ/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1922017)
வருகையாளர் எண்ணிக்கை : 216