சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குப்பையிலிருந்து செல்வம்: கழிவுப் பயன்பாட்டுக்கான புதிய தீர்வுகளுக்காக ஹேக்கத்தான்

प्रविष्टि तिथि: 04 MAY 2023 4:05PM by PIB Chennai

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இணையதளம் வாயிலாக குப்பையிலிருந்து செல்வம் வழிவகை ஹேக்கத்தான் போட்டியை பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்காக மே 14, (ஞாயிறு) 2023 அன்று நடத்த உள்ளது. இதற்கான பதிவு https://cpcb.nic.in/w2w-hackathon-cpcb/#  என்ற இணையதளத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

பிளாஸ்டிக் கழிவு, மின்னணுக் கழிவு, பேட்டரி கழிவு, பயிர்க் கழிவு ஆகியவற்றில் உள்ள உலகளாவிய கழிவு மேலாண்மை சவால்களில் தீர்வு காண்பதற்கு நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இப்போட்டி ஒரு தளமாக அமைக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியின் மூலம் ரூ.3.6 லட்சம் பரிசு தொகை ரொக்கமாக மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இப்போட்டியில் பங்கேற்பதற்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள் மே 12, 2023 (வெள்ளிக்கிழமை).

                                                                                                                     ***

AD/IR/RJ/KPG

 

 


(रिलीज़ आईडी: 1922006) आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu