தேர்தல் ஆணையம்
உத்தரப் பிரதேச சட்டமன்ற மேலவை இடைத்தேர்தல் அறிவிப்பு
Posted On:
04 MAY 2023 3:37PM by PIB Chennai
உத்தரப் பிரதேச சட்டப் பேரவையின் மேலவையில் காலியாக உள்ள இரண்டு காலியிடங்களுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது.
திரு லட்சுமன் பிரசாத் ஆச்சார்யா ராஜினாமா செய்ததாலும், திரு பன்வாரி லால் மறைவாலும் இந்த காலியிடங்கள் உருவாகியுள்ளன. இந்த இரு இடங்களுக்கும் நடக்கும் இடைத்தேர்தலில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்து உறுப்பினர்களைத் தேர்வு செய்வார்கள்.
இந்த இரு இடங்களுக்கும் வேட்புமனு தாக்கல் வரும் 11ந்தேதி துவங்கும்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி - மே 18 (வியாழன்). வேட்புமனுக்கள் பரிசீலனை- மே 19 (வெள்ளிக்கிழமை)
மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி- மே 22 (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு - மே 29 (திங்கட்கிழமை)
வாக்குப்பதிவு நேரம்- காலை 09:00 முதல் மாலை 04:00 மணி வரை.
வாக்கு எண்ணிக்கை- மே 29 (திங்கட்கிழமை) மாலை 05:00 மணிக்கு.
தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்போது, கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான தற்போதைய அறிவுறுத்தல்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்ய, மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு உத்தரப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
***
AD/PKV/KPG
(Release ID: 1921953)
Visitor Counter : 179