நிலக்கரி அமைச்சகம்

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 23 சதவீதம் அதிகரித்துள்ளது

Posted On: 03 MAY 2023 3:44PM by PIB Chennai

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 2022-23-ம் நிதியாண்டில் 893.08 மில்லியன் டன்னாக இருந்தது. இது 2018-19-ம் நிதியாண்டை விட 22.6 சதவீதம் அதிகமாகும். 2018-19-ம் நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி 728.72 மில்லியன் டன்னாக இருந்தது. நிலக்கரி இறக்குமதியை குறைத்து உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க செய்வதற்கு அமைச்சகம் முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் உற்பத்தி 703.21 மில்லியன் டன்கள் அதிகரித்துள்ளது. இது 2018-19-ம் நிதியாண்டை விட 15.9 சதவீதம் அதிகமாகும். எஸ்சிசிஎல் கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 67.14 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி உற்பத்தி செய்தது. இது 2018-19-ம் நிதியாண்டை விட 4.3 சதவீதம் அதிகமாகும்.

நடப்பு 2023-24-ம் நிதியாண்டில் ஆண்டு நிலக்கரி உற்பத்தி இலக்கு 1012 மில்லியன் டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

***

AD/IR/AG/KPG



(Release ID: 1921724) Visitor Counter : 138