இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பகிர்ந்து கொள்ளப்படும் எதிர்காலம்: ஜனநாயகம் மற்றும் நிர்வாகத்தில் இளையோர் குறித்த ஒய்-20, கருத்தரங்கை மே 4, 2023 அன்று மணிப்பூர் பல்கலைக்கழகம் நடத்தவுள்ளது

Posted On: 03 MAY 2023 2:42PM by PIB Chennai

பகிர்ந்து கொள்ளப்படும் எதிர்காலம் : ஜனநாயகம் மற்றும் நிர்வாகத்தில் இளையோர் குறித்த ஒய்-20, கருத்தரங்கை மே 4, 2023 அன்று மணிப்பூர் பல்கலைக்கழகம் நடத்தவுள்ளது. இது ஒய்-20 இந்தியா மாநாட்டின் 5 கருப்பொருள்களில் ஒன்றாகும்.

ஜி-20 மாநாட்டில் இளையோர் பங்கேற்பது குறித்து இக்கருத்தரங்கு கவனத்தில் கொள்ளும். இந்த கருத்தரங்கை மணிப்பூரின் 16 மாவட்டங்களிலும் எடுத்துசெல்ல வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமாகும். 26 வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட 550 பேர் இதில் பங்கேற்கவுள்ளனர். மணிப்பூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 70 மாணவர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இது குறித்துப் பேசிய மணிப்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என் லோகேந்திர சிங், மணிப்பூர் சிறிய மாநிலமாக இருந்தாலும், விளையாட்டு மற்றும் கலாச்சாரத் துறையில் பெரும் பங்களிப்பு செய்துள்ளதாக கூறினார்.  இம்மாநில இளைஞர்கள் தங்களது நடவடிக்கைகளின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார். தங்களுடைய மாணவர்களின் சிறப்பான சாதனைகளால் கருத்தரங்கம் நடத்தும் பொறுப்பை தங்களுக்கு அளித்துள்ளதாக துணைவேந்தர் குறிப்பிட்டார்.

 

***

AD/IR/AG/KPG


(Release ID: 1921706) Visitor Counter : 181