தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலைத்தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறையில் எளிதாக வணிகம் செய்வதற்கான பரிந்துரைகளை ட்ராய் வெளியிட்டது

Posted On: 02 MAY 2023 6:09PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இன்று ‘தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறையில் எளிதாக வணிகம் செய்வது’ குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.

அனைத்துத் துறைகளிலும் ஒவ்வொரு மட்டத்திலும் வணிகச் சூழலை மேம்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில், தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறையில் வணிகச் சூழலை மேம்படுத்த ட்ராய் கடமைப்பட்டுள்ளது. இதற்காக, ட்ராய் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி "தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறையில் எளிதாக வணிகம் செய்வது" என்ற தலைப்பிலான ஆலோசனைகளை வெளியிட்டது. இந்த ஆலோசனைகள் மீதான கருத்துகளைத் தெரிவிக்க 2022-ம் ஆண்டு பிப்ரவரி 09-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதில், 45 ஆதரவா கருத்துகளும், நான்கு எதிர்மறையான நான்கு கருத்துகளையும் ஆணையம் பெற்றது.

இந்த பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

1)    பயனர்களுக்கு எளிதான, வெளிப்படையான மற்றும் பதிலளிக்கக்கூடிய டிஜிட்டல் ஒற்றைச் சாளர அமைப்பு நிறுவப்பட வேண்டும். துறைகளுக்கிடையேயான ஆன்லைன் செயல்முறைகளை இறுதி முதல் இறுதி வரை அடைய புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் போர்ட்டல் இயக்கப்பட வேண்டும்.

2)    ஒவ்வொரு அமைச்சகமும் ஒரு நிலையான எளிதாக வணிகம் செய்வது குறித்த குழுவை நிறுவி, தற்போதுள்ள செயல்முறைகளை தொடர்ந்து மதிப்பாய்வு செய்யவும், எளிமைப்படுத்தவும், புதுப்பிக்கவும், எளிய வணிகத்தை உறுதி செய்யவும் வேண்டும்.

3)    அரசுத் துறைகள் ஆரம்ப மற்றும் கூடுதல் அனுமதிகள் உட்பட அனைத்து செயல்முறைகளுக்கும் காலக்கெடுவைக் குறிப்பிட வேண்டும்.

 

-----

AD/CR/KPG

 


(Release ID: 1921490) Visitor Counter : 172