அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியாவும் இஸ்ரேலும் புத்தாக்கம் மற்றும் ஸ்டார்ட்அப் போன்ற துறைகளில் கூட்டாண்மையை மேம்படுத்தும்- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
02 MAY 2023 5:52PM by PIB Chennai
இந்தியாவும் இஸ்ரேலும் புத்தாக்கம் மற்றும் ஸ்டார்ட்-அப்கள் போன்ற துறைகளில் கூட்டாண்மையை மேம்படுத்தி ஆழமான இருதரப்பு ஒத்துழைப்பின் புதிய கட்டத்தை உருவாக்கும் என்று மத்திய அறிவியல் & தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் டிடிஆர்&டியின் தலைவர் டாக்டர் டேனியல் கோல்ட் தலைமையிலான உயர்மட்ட இஸ்ரேல் தூதுக்குழு இன்று அமைச்சரைச் சந்தித்தது.
இந்தச் சந்திப்பின் போது, விண்வெளி, மின்னணுவியல் கருவிகள், சிவில், உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல், சூழலியல், சுற்றுச்சூழல், பூமி மற்றும் பெருங்கடல் அறிவியல் மற்றும் நீர், சுரங்கம் போன்ற பல முக்கிய தொழில்நுட்பப் பகுதிகளை மையமாகக் கொண்டு, இந்தியாவும் இஸ்ரேலும் கனிமங்கள், உலோகங்கள் & பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ், எரிசக்தி (மரபு மற்றும் மரபுசாரா), வேளாண்மை, ஊட்டச்சத்து & உயிரியல் மற்றும் சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளில், தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை வரவேற்ற டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா ஜி 20 தலைவர் தலைமைப் பொறுப்பை மேற்கொண்டுள்ள 2023 நாட்டிற்கு மிக முக்கியமான ஆண்டு என்று கூறினார். இந்தியாவும் இஸ்ரேலும் வெற்றிகரமான இராஜதந்திர உறவுகளின் 30 ஆண்டுகளைக் கொண்டாடும் ஆண்டும் இதுவாகும்.
இந்தியா-இஸ்ரேல் கூட்டுறவில் இந்த ஒப்பந்தம், புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்அப்கள் போன்ற துறைகளில் ஒரு புதிய கட்டத்தைத் திறக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக அமைச்சர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, நாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளை ஊக்குவித்து வருவதாகவும், தேவையான கொள்கை மற்றும் பட்ஜெட் ஆதரவை வழங்கி வருகிறது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
விண்வெளி, சுகாதாரம், உணவு, விவசாயம், எரிசக்தி, விண்வெளி, ஸ்மார்ட் நகரங்கள், சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு போன்றவை அரசு தீவிர கவனம் செலுத்தும் துறைகள் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.
**
AD/PKV/KPG
(Release ID: 1921482)
Visitor Counter : 180