குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடியின் பிரபலமான வானொலி நிகழ்ச்சியான 'மனதின் குரல்' 100வது அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், ஹரியானாவின் பிவானியில் உள்ள துல்ஹெடி கிராமத்தில் 'மனதின் குரலில்' 98வது அத்தியாயத்தின் 'ஸ்வச்சதா கே சிபாஹியோன்' சிறப்பு நிகழ்ச்சியை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC) ஏற்பாடு செய்தது

Posted On: 30 APR 2023 2:45PM by PIB Chennai

ஹரியானா மாநிலம் பிவானியில் உள்ள துல்ஹெடி கிராமத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் பிரபலமான வானொலி நிகழ்ச்சியான 'மனதின் குரல்' 100வது அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC) இன்று சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் 98வது அத்தியாயத்தில் 'ஸ்வச்சதா கே சிபாஹியோன்' நிகழ்ச்சியை கௌரவிக்கும் வகையிலும், இந்திய அரசின் முதன்மைத் திட்டமான 'பிரதமரின்  வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்' (PMEGP) பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு  மனோஜ் குமார், பிரதமரின்  வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட (PMEGP) விழிப்புணர்வு குறித்து உரையாற்றுகையில், பிரதமரின் 'மனதின் குரல்' காதியை தன்னிறைவு பெறச் செய்வதில் முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது என்று தெரிவித்தார். மேலும், பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வை இளைஞர்களை வெறும் வேலை தேடுபவர்களாக இல்லாமல், பிறருக்கு வேலை அளிப்பவர்களாக மாற்றுவது ஆகும். இந்த விழிப்புணர்வு முகாமில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஹரியானாவில் உள்ள துல்ஹெடி கிராமத்தை சமீபத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி, தனது மனதின் குரலின் 98வது நிகழ்ச்சியில் குறிப்பிட்டு இந்த கிராமத்தின் தூய்மை வீரர்களைப் பாராட்டியிருந்தார். துல்ஹெடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் யுவ ஸ்வச்சதா ஏவம் ஜன் சேவா சமிதி என்ற அமைப்பை உருவாக்கி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் குப்பைகளை அகற்றினர்.

துல்ஹெடி கிராமத்தின் அனைத்து 'தூய்மை வீரர்களையும்' திரு  மனோஜ் குமார் வாழ்த்தினார். அதிக அளவில் இளைஞர்களை பிரதமரின்  வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (PMEGP) இணைப்பதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் பங்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

நிகழ்ச்சியில் ஹரியானா அரசு மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகள், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் பணியாளர்களும்  அதிகாரிகளும்  கலந்து கொண்டனர், இது பிரதமரின்  வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதிலும் சமூக வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதை ஊக்குவிப்பதாகவும் மிகவும் வெற்றிகரமாக அமைந்திருந்தது.

***

AP/CJL/DL


(Release ID: 1920935) Visitor Counter : 169