மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மூன்றாவது கல்விப் பணிக்குழுக் கூட்டம் புவனேஸ்வரில் தொடங்கியது
Posted On:
27 APR 2023 5:42PM by PIB Chennai
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் மூன்றாவது கல்விப் பணிக்குழுக் கூட்டம் புவனேஸ்வரில் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு சுபாஷ் சர்கார் தொடக்கவுரையாற்றினார்.
தரமான கல்வியை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ், கல்விப் பணிக்குழு செயலாற்றி வருவதாக அவர் கூறினார். வளர்ந்து வரும் பணிச்சூழலுக்கேற்ற திறனை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். சமூக பயன்களுக்காக நீடித்தத் தீர்வுகளை இணைந்து ஏற்படுத்துமாறு திரு சுபாஷ் சர்கார் அழைப்பு விடுத்தார்.
உயர் கல்வித் துறை செயலாளர் திரு சஞ்சய் மூர்த்தி, பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர் திரு சஞ்சய் குமார், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்த் துறை செயலாளர் திரு அதுல் குமார் திவாரி மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 27 நாடுகளின் 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
***
AD/IR/RS/KRS
(Release ID: 1920340)