தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரத்யேக கைவினைப் பொருட்கள் பரிசளிக்கப்பட்டன

प्रविष्टि तिथि: 27 APR 2023 5:03PM by PIB Chennai

மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரத்யேக கைவினைப் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

பிரதமர் திரு.நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் போது குறிப்பிட்ட அல்லது மேற்கோள் காட்டிய பிரபலங்கள், கலைஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டை நேற்று தொடங்கி வைத்த குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கருக்கு, கோவாவைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் சாகர் முலே கொங்கனி முறையில் தயாரித்த பிரத்யேக காவி வகை ஓவியம் பரிசாக வழங்கப்பட்டது. திரு.சாகர் முலே அவர்கள் காவி வகை ஓவியத்தை கோவாவின் கொங்கன் பகுதியிலிருந்து நவீன கால நயத்துடன் மறு உருவாக்கம் செய்தவர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிற விருந்தினர்களுக்கு, ஒடிசாவைச் சேர்ந்த பாக்யஸ்ரீ சாகு தயாரித்த கல்லால் உருவாக்கப்பட்ட பட்டச்சித்ரா வகை ஓவியங்களும், ஆந்திராவைச் சேர்ந்த சி.வி.ராஜூ தயாரித்த எட்டிகோபக்கா வகை மரச்சிற்பங்களும் பரிசளிக்கப்பட்டன.

புதுதில்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அனுராக் சிங் தாக்கூர், அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

***

(Release ID: 1920240)

AD/AP/RR/KRS


(रिलीज़ आईडी: 1920319) आगंतुक पटल : 185
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Marathi , Punjabi , Telugu