பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

இந்தியா – இங்கிலாந்து கூட்டு ராணுவப் பயிற்சி “அஜயா வாரியர் -2023” இங்கிலாந்தின் சாலிஸ்பரி சமவெளியில் தொடங்கவுள்ளது

Posted On: 27 APR 2023 5:01PM by PIB Chennai

இந்தியா – இங்கிலாந்து இடையே 7-வது கூட்டு ராணுவப் பயிற்சி “அஜயா வாரியர்-2023” இங்கிலாந்தின் சாலிஸ்பரி சமவெளியில் ஏப்ரல் 27 முதல் மே 11,2023 வரை நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அஜயா வாரியர் கூட்டு ராணுவப் பயிற்சி  இங்கிலாந்திலும், இந்தியாவிலும் நடைபெறுவது வழக்கமாகும். கடந்த முறை உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சௌபாட்டியாவில் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது.

இப்பயிற்சியில் இங்கிலாந்தைச் சேர்ந்த 2 ராயல் கூர்கா ஃரைபிள்  பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்களும், பீகார் ரெஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்களும் பங்கேற்கின்றனர். இதற்காக இந்திய ராணுவ வீரர்கள் குழு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுடன் இந்திய விமானப்படையின் சி-17 விமானம் மூலம் ஏப்ரல் 26, 2023 அன்று பிரிஸ் நார்ட்டான் சென்றடைந்தனர்.

***

AP/IR/RS/KRS(Release ID: 1920269) Visitor Counter : 166