பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வங்கதேச ராணுவத் தலைமை தளபதி மூன்று நாள் பயணமாக வருகை

प्रविष्टि तिथि: 27 APR 2023 1:52PM by PIB Chennai

வங்கதேச ராணுவத் தலைமை தளபதி எஸ் எம் ஷஃபியுதின் அகமது மூன்று நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இன்று முதல் 29 ஆம் தேதி வரையிலான இந்தப் பயணத்தின்  போது இந்திய ராணுவ அதிகாரிகளை சந்தித்து இந்தியா - வங்கதேசம் இடையேயான ராணுவ உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். புதுதில்லியில்  உள்ள தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பயிற்சி, தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு மற்றும் ஒட்டுமொத்த இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்திய ராணுவத்தின் அதிகாரிகள் அனில்சவுகான், ஆர் ஹரி குமார், கடற்படையின் பணியாளர்கள் பிரிவு தலைவர் ஏர் மார்ஷல் ஏ பி சிங், துணைத்தலைவர் உள்ளிட்டோரையும் எஸ் எம் ஷஃபியுதின் அகமது சந்தித்து பேசினார். அவருக்கு இந்தியாவில்  உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்  பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

வரும் 29  ஆம் தேதி சென்னையில் உள்ள ராணுவப் பயிற்சி அகாடமியில் நடைபெற உள்ள பயிற்சி நிறைவு அணிவகுப்பை பார்வையிடுவதுடன், பயிற்சி முடித்துச் செல்லும் அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளார்.

***

AP/ES/MA/KRS


(रिलीज़ आईडी: 1920199) आगंतुक पटल : 179
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu , Malayalam