வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எழில்மிகு நகரம் போட்டியை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தொடங்கியது

Posted On: 27 APR 2023 12:47PM by PIB Chennai

எழில்மிகு நகரம் போட்டியை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் ஏப்ரல் 26, 2023 அன்று தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் https://citybeautycompetition.in என்ற  இணையதளம் வாயிலாக இப்போட்டியில் பங்கேற்கலாம். பொது இடங்கள் உள்பட அழகான, புதுமை கண்டுபிடிப்புகளுடன் கூடிய முயற்சிகளை மேற்கொள்ளும் நகரங்கள் மற்றும் வட்டங்களை ஊக்கப்படுத்தி அங்கீகரிப்பது இப்போட்டியின் நோக்கமாகும். அணுகுமுறை, வசதிகள், நடவடிக்கைகள், எழில், சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படும்.  நகரங்களில் உள்ள மிகவும் எழில்மிகு வட்டங்கள் மற்றும் பொது இடங்கள்  ஆகியவை இப்போட்டியின் மூலம் பாராட்டப்படும். தேர்ந்தெடுக்கப்படும் வட்டங்கள், நகரம் மற்றும் மாநில அளவில் பாராட்டப்படும். நீர்நிலைகள், பசுமைப் பகுதிகள், சுற்றுலா மற்றும் பாரம்பரிய இடங்கள், சந்தை மற்றும் வர்த்தகப்பகுதிகள் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ், நகரங்களில் உள்ள மிகவும் சிறந்த எழில்மிகு பொது இடங்கள் தேர்ந்தெடுக்கப்படும். பின்னர் அந்த நகரங்கள் தேசிய அளவிலான விருதுக்கு பரிசீலிக்கப்படும்.

எழில்மிகு நகரப் போட்டியில்  பங்கேற்பதற்கான கடைசி நாள் ஜூலை 15, 2023 ஆகும். போட்டியில் பங்கேற்க விரும்பும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், புகைப்படங்கள். வீடியோ பதிவுகள், தகவல்கள் உள்ளிட்ட ஆவணங்களை இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1920149

AD/IR/RS/SG


(Release ID: 1920176) Visitor Counter : 186