மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
ஆதார் அங்கீகார பரிவர்த்தனைகள் மார்ச் மாதத்தில் 2.31 பில்லியன் எண்ணிக்கையை எட்டியது; ஆதார் அடிப்படையிலான மின்னணு – நுகர்வோர் விவரங்கள் நடவடிக்கை 16 சதவீதமாக உயர்ந்தது
Posted On:
26 APR 2023 4:58PM by PIB Chennai
ஆதார் அங்கீகார பரிவர்த்தனைகள் மார்ச் மாதத்தில் 2.31 பில்லியன் எண்ணிக்கையை எட்டியது. இது ஆதார் பயன்பாட்டின் வளர்ச்சி மற்றும் நாட்டில் மின்னணு பொருளாதார வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது. ஆதார் அடிப்படையிலான மின்னணு – நுகர்வோர் சேவை, வங்கி மற்றும் வங்கி சாரா நிதி சேவைகளில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. இது வெளிப்படைத் தன்மையை அளித்து வாடிக்கையாளரின் நலனை மேம்படுத்தி எளிதாக வர்த்தகம் புரிகிறது. மார்ச் 2023-ல் 311.8 மில்லியனுக்கும் மேற்பட்ட மின்னணு அடிப்படையிலான வாடிக்கையாளர்களின் விவரங்கள் குறித்த பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது. இது பிப்ரவரி மாதத்தை விட 16.3 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் 21.47 மில்லியன் ஆதார் அட்டைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
AD/IR/RS/RR
(Release ID: 1919930)
Visitor Counter : 156