அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 6 நாள் அரசு முறைப் பயணமாக லண்டன் புறப்பட்டு சென்றார்: பிரிட்டன் அமைச்சர்கள், இந்திய சமூதாயத்தினர், ஸ்டார்ட் அப் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார்
Posted On:
25 APR 2023 4:03PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 6 நாள் அரசு முறைப் பயணமாக இன்று (25.04.2023) லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரிட்டன் அமைச்சர்கள், இந்திய சமூதாயத்தினர், ஸ்டார்ட் அப் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களுடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.
இங்கிலாந்தின் புதிய பிரதமராக திரு ரிஷி சுனக் பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளப்படும் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கிலாந்தின் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான அமைச்சர் திரு ஜார்ஜ் வில்லியம் ஃப்ரிமன், மத்திய கிழக்கு, வடக்கு ஆப்ரிக்கா, தெற்காசிய நாடுகளுக்கான இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் திரு லார்டு அகமது ஆகியோருடன் திரு ஜிதேந்திர சிங் பேச்சு நடத்தவுள்ளார்.
ரோல்ஸ் ராய்ஸ் வாகன உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடனான கூட்டம் மற்றும் இங்கிலாந்து அறிவியல் புதுமைக் கண்டுபிடிப்பு கவுன்சில் கூட்டம் ஆகியவற்றிலும் அமைச்சர் பங்கேற்க உள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், சர்ரே பல்கலைக்கழகம், லண்டன் இம்பீரியல் கல்லூரி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கும் அமைச்சர் செல்ல உள்ளார். இங்கிலாந்தின் முன்னணி அறிவியல் ஆராய்ச்சி மையங்களுக்கும் அவர் செல்லவுள்ளார்.
இந்திய சமுதாயத்தினர் மற்றும் இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களுடன் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாட உள்ளார்.
***
SM/PLM/RS/KRS
(Release ID: 1919592)