பாதுகாப்பு அமைச்சகம்
கோப் இந்தியா- 2023 விமானப்படை போர்ப்பயிற்சி நிறைவு
Posted On:
25 APR 2023 11:07AM by PIB Chennai
ஆறாவது கோப் இந்தியா விமானப்படை போர்ப்பயிற்சி கடந்த 2 வாரங்களாக கலைக்குந்தா, பனாகர் மற்றும் ஆக்ரா விமானப்படைத் தளங்களில் நடைபெற்று வந்தது. இது கலைக்குந்தா விமானப்படைத் தளத்தில் 2023, ஏப்ரல் 24 அன்று நிறைவடைந்தது. இந்திய விமாப்படை விமானங்கான ரஃபேல், தேஜாஸ், எஸ்யு- 30எம்கேஐ, ஜாகுவார், சி-17 மற்றும் சி-30 ரக விமானங்கள் இப்பயிற்சியில் பங்கேற்றன. இதேபோல் அமெரிக்க விமானப்படை சார்பில் எஃப்-15 ஸ்டிரைக் ஈகிள் ஃபைட்டர், சி-130, எம்சி-130 ஜெ, சி-17 மற்றும் பி1பி விமானங்கள் பங்கேற்றன. ஜப்பான் விமானப்படையினரும் பார்வையாளராக இதில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டு போர்ப்பயிற்சி சிறந்த நடைமுறைகள் மற்றும் பயிற்சி செயல்முறைகளை பகிர்ந்துகொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்திருந்தது. இந்த போர்ப்பயிற்சியின் போது, கலாச்சார பரிவர்த்தனை தொடர்பான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
***
SM/PLM/RS/KRS
(Release ID: 1919462)
Visitor Counter : 171