குடியரசுத் தலைவர் செயலகம்
இந்திய சிவில் கணக்குச் சேவை அதிகாரிகள் குடியரசு தலைவருடன் சந்திப்பு
Posted On:
25 APR 2023 11:01AM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில், இந்திய சிவில் கணக்குச் சேவை அதிகாரிகள் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தனர்.
அவர்களிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், சிவில் கணக்குச் சேவை நாட்டின் நிதி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிப்பதை சுட்டிக்காட்டினார். எந்த துறையில் பணியமர்த்தப்பட்டாலும், அந்தத் துறையின் உன்னதத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய திருமதி திரௌபதி முர்மு, அப்போது தான் உங்களை பணியில் அமர்த்தியதன் குறிக்கோள் நிறைவேறும் என்றும் குறிப்பிட்டார். நாட்டின் வளர்ச்சியை உள்ளடக்கிய மக்களின் நலனில் அக்கறைக்கொண்டு பணியாற்ற வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயித்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் இந்திய சிவில் கணக்குச் சேவை அளப்பரிய பங்காற்றுவதாக கூறிய திருமதி திரௌபதி முர்மு, பொதுநிதி மேலாண்மைக்கு புதிய வடிவத்தை உருவாக்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
பொதுநிதி மேலாண்மை அமைப்பின் குரலாக செயல்பட்டு நாட்டின் வளர்ச்சியை உள்ளடக்கிய சமத்துவத்தை நிறைவேற்ற பாடுபடவேண்டும் என வலியுறுத்தினார்.
புதிய கணக்கு மென்பொருட்களும், சேமிப்பு தொழில்நுட்பங்களும் கணக்கு முறைகளை மிகவும் துல்லியமானதாகவும், எளிமையானதாகவும் தொழில்நுட்பங்களின் பயன்பாடு, ஆட்சிமுறையில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாகவும் டிஜிட்டல் மயமாக்கமல் மற்றும் இணையதளச் சேவைகைள், பொது நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை அதிகரித்திருப்பதாகவும் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.
***
AD/ES/RJ/KRS
(Release ID: 1919445)
Visitor Counter : 169