தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
இ-ஷ்ரம் இணையதளத்தில், புதிய அம்சங்களை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
24 APR 2023 1:29PM by PIB Chennai
இ-ஷ்ரம் இணையதளத்தில், புதிய அம்சங்களை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான புதிய அம்சம் இந்த இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களது குழந்தைகளுக்கு எளிதில் கல்வி வழங்குவதற்கான வாயப்புகள் ஏற்படும். அமைப்பு சாரா தொழிலாளார்கள் இந்த தளத்தில் எளிதில் பதிவு செய்யும் வகையில் இந்த தளம் தற்போது மேலும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்துள்ளவர்கள் வேலைவாய்ப்பு தகவல்கள், தொழில் பழகுநர் பயிற்சிகள், திறன் மேம்பாடு, ஓய்வூதிய திட்டங்கள் போன்றவை குறித்து இனி மேலும் எளிதில் அறிந்துகொள்ள இயலும்.
2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த தளத்தில் 2023 ஏப்ரல் 21-ம் தேதி வரை 28.87 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
***
SM/PLM/RJ/RJ
(रिलीज़ आईडी: 1919283)
आगंतुक पटल : 305