ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
2023 ஆகஸ்ட் மாதத்தில் ஜி20 சுகாதார அமைச்சர்கள் சந்திப்பின் போது இந்திய மருத்துவ சாதனங்கள் துறை குறித்த – இந்தியா மெட்டெக் எக்ஸ்போ 2023 எனும் மூன்று நாள் தேசிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Posted On:
24 APR 2023 1:23PM by PIB Chennai
ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் கீழ் இந்திய மருத்துவ சாதனங்கள் துறையின் திறன்களை எடுத்துக்காட்டும் விதமாக 2023 ஆகஸ்ட் மாதத்தில் ஜி20 சுகாதார அமைச்சர்கள் சந்திப்பின் போது இந்திய மருத்துவ சாதனங்கள் தொழில் துறையுடன் இணைந்து முதல் முறையாக இந்தியா மெட்டெக் எக்ஸ்போ 2023 எனும் மூன்று நாள் தேசிய கண்காட்சி குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெறவுள்ளது.
ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டம் 2023 ஆகஸ்ட் 17 முதல் 19 வரை நடைபெறவுள்ள நிலையில், இந்த கண்காட்சியை 2023 ஆகஸ்ட் 18 முதல் 19 வரை நடத்த மருந்து பொருட்கள் துறை திட்டமிட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் 150க்கும் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், 275-க்கும் அதிகமான இந்தியா மற்றும் சர்வதேச மருத்துவ சாதன உற்பத்தி நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகள், 50 ஆராய்ச்சி நிறுவனங்கள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ சாதனங்கள், தொழில்நுட்ப தொழில் துறையிடமிருந்து இந்த கண்காட்சிக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த துறையை மேம்படுத்த உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம், மருத்துவ சாதனங்கள் பூங்கா திட்டம் போன்றவற்றுக்கு மருந்து பொருட்கள் துறை ஆதரவு அளித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1919111
***
AD/SMB/AG/RR
(Release ID: 1919255)
Visitor Counter : 144