வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
தொழில் முன்னேற்றம் மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை செயலாளராக திரு ராஜேஷ் குமார் சிங் பொறுப்பேற்பு
प्रविष्टि तिथि:
24 APR 2023 2:14PM by PIB Chennai
தொழில் முன்னேற்றம் மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை செயலாளராக திரு ராஜேஷ் குமார் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார். இப்பதவியை வகித்து வந்த திரு அனுராக் ஜெயின் சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
1989-ம் ஆண்டு ஐஏஎஸ் முடித்த கேரளாவைச் சேர்ந்த ராஜேஷ் குமார் சிங், மத்திய அரசில் ஆணையர், இணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் கேரள அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட பணிகளையும் ஏற்கனவே வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1919138
***
SM/ES/RS/RR
(रिलीज़ आईडी: 1919252)
आगंतुक पटल : 174