இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
மணிப்பூரில், மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேசங்களின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர்களின் 'சிந்தனைக் கூட்டத்திற்கு' மத்திய விளையாட்டுக்கள் துறை அமைச்சர் தலைமை தாங்கவிருக்கிறார்
Posted On:
23 APR 2023 6:18PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், ஏப்ரல் 24-25 தேதிகளில் மணிப்பூர் மாநிலம் இம்பாலில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர்களின் 2 நாள் 'சிந்தனைக் கூட்டத்திற்கு' தலைமை தாங்குகிறார்.
பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் இளைஞர் நல அமைச்சகம் ஆகியவற்றில் இருந்து 100க்கும் மேற்பட்ட அழைப்பாளர்கள் தனித்துவம் வாய்ந்த இரண்டு நாள் சிந்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, இந்தியாவை மிகப்பெரிய விளையாட்டு சக்திகளில் ஒன்றாக மாற்றுவது குறித்தும் தேசத்தை மிகச் சிறந்த வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வது குறித்தும் தங்கள் கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைப்பார்கள். ஆளுமை மேம்பாடு மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல், அதாவது இளைஞர்களை பல்வேறு தேசக்கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களின் ஆளுமையை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக செயல்படுவது குறித்தும் கலந்துரையாடல் நடைபெறும்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், மத்திய அமைச்சர், திரு அனுராக் சிங் தாக்கூர், குஜராத்தின் கெவாடியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர்களின் இரண்டு நாள் தேசிய மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். அந்த அமர்வில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விளையாட்டுத் துறையை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பதற்கான வழிகள் மற்றும் திட்டங்கள் பற்றி விவாதித்தனர்.
***
SMB/CJL/DL
(Release ID: 1919000)
Visitor Counter : 152